ஆத்தூரில் புதிய நிழற்௯டத்தை திறந்து வைத்த எம்எல்ஏ

ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்திராநகர் பகுதியில் ₹9.98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நிழற்௯டத்தை எம்எல்ஏ ஜெயசங்கரன் திறந்து வைத்தார் .;

Update: 2024-03-08 12:18 GMT

பேருந்து நிறுத்தத்தை திறந்து வைத்த எம்எல்ஏ

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட துணக்குண ஊராட்சி இந்திரா நகர் பகுதியில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்த ₹9.98 லட்ச ரூபாய் நிழற்கூடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் புதிய நிழற்௯டத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர்,சேகர்,ஒன்றிய துணை செயலாளர் உமா மகேஸ்வரி, குட்லக்(எ) இளங்கோவன்,

துலுக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் மருதமுத்து, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லட்சுமி; கலைச்செல்வன் கிளைச் செயலாளர்கள், கோவிந்தன், செல்வம் ,பெரியசாமி,கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செல்வமணி உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News