தொண்டி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டும்பணி எம்.எல்.ஏ. ஆய்வு
ஆய்வின் போது ஒன்றிய செயலாளர் உடனிருந்தார்
Update: 2023-12-09 08:28 GMT
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே ஆலகிராமம், ரெட்டணை கிராமத்தில் இடையில் தொண்டி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே தமிழக அரசு சார்பில் ரூ.3 கோடியே 48 லட்சம் செலவில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் ஆய்வு செய்து, துரிதமாக பணியை முடிக்க சம்மந்தபட்ட ஒப்பந்ததாரரிடம் கூறினார். அப்போது மயிலம் ஒன்றிய செயலாளர் சண்முகம், ஒன்றிய தலைவர் இளம்வழுதி, ஊராட்சி மன்ற தலைவர் குமுதாரமேஷ், நெடிமொழியனூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் பா.ம.க. கட்சி நிர் வாகிகள் பாலகிருஷ்ணன், சரவணன், ராஜேந்திரன், தண்டபாணி, வெல்டிங், சுரேஷ், முருகன், சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.