நாடாளுமன்ற உறுப்பினர் மறைவிற்கு எம் எல் ஏ ஈஸ்வரன் இரங்கல் !

திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தேசிய கட்சியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். என இரங்கல் செய்தி குறிப்பில் எம் எல் ஏ ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்;

Update: 2024-03-28 12:01 GMT
நாடாளுமன்ற உறுப்பினர் மறைவிற்கு எம் எல் ஏ ஈஸ்வரன் இரங்கல் !

 எம் எல் ஏ ஈஸ்வரன்

  • whatsapp icon
ஈரோடு சுற்று வட்டார மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் கணேசமூர்த்தி MP அவர்கள் மறைவு தொகுதி மக்களுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் பெரும் இழப்பு ஆகும். எளிதில் அனைவரிடமும் பழகக்கூடிய சாதாரண மனிதராகிய இவர் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் சுமார் 20 ஆண்டு காலங்கள் மக்கள் பணி செய்து வந்துள்ளார். தொகுதி மக்களின் தேவைக்காக பல முறை சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் பேசி தொகுதி மக்களுக்கு தேவையான பல அடிப்படை கட்டமைப்புகளை கொண்டு வந்துள்ளார். அண்ணன் கணேசமூர்த்தி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். என இரங்கல் செய்தி குறிப்பில் எம் எல் ஏ ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News