மல்லசமுத்திரம் பாலிக்காட்டில் புதிய தார்சாலை அமைக்க எம்.எல்.ஏ., எம்.பி., பூமி பூஜை செய்தனர்

நாமக்கல் மல்லசமுத்திரம் பாலிக்காட்டில், புதிய தார்சாலை அமைக்க எம்.எல்.ஏ., எம்.பி., பூமி பூஜை செய்தனர்.

Update: 2024-02-28 11:27 GMT

பூமி பூஜை 

நாமக்கல் எம்.பி.,சின்ராசு மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.4லட்சத்து 75ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளிக்கு தேவையான 50டெஸ்க், 50டேபிள்களை வழங்கினார். தலைமை ஆசிரியை சாந்தாமணி பெற்றுக்கொண்டார். அதேபோல், மல்லசமுத்திரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் 50டெஸ்க், 50டேபிளை வழங்கினார். தலைமை ஆசிரியர் மாணிக்கம் பெற்றுக்கொண்டார். மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்திற்குட்பட்ட, பாலிக்காடு பகுதியில் நபார்டு திட்டத்தின்கீழ், ரூ.94லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் புதிய தார்சாலைக்கு திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் பூமி பூஜைசெய்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, அரசமரம் பஸ்ஸ்டாப்பில் நக்குநாமே திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறு உயர்மின் கோபுர விளக்கை எம்.எல்.ஏ.,ஈஸ்வரன் மற்றும் எம்.பி.,சின்ராசு திறந்து வைத்தனர். அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News