ஆக்கிரமிப்புகள் அகற்ற மக்கள் நீதி மையம் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை

குமாரபாளையத்தில் மேம்பாலம் கட்டுமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மையம் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-02-19 04:12 GMT

ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை 

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் மேம்பாலம் கட்டுமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மையம் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் சித்ரா, மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கத்தேரி பிரிவில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் உள்ள சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு செய்து, தள்ளுவண்டி கடைகள் வைத்திருப்பதால் சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகன ஓட்டிகள்   மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

Advertisement

அனைத்து வாகனங்களும் எளிதில் செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இப்பகுதியில் மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கு  விளையாட்டு மைதானம்,அமைத்தால் அப்பகுதியில் உள்ள வட்டமலை, எதிர்மேடு, வளையக்காரனூர், தட்டாங்குட்டை, ஜெய்ஹிந்த நகர், பாரதி எஸ்டேட், பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அப்பகுதியில் இருப்பவர்கள் ஏதாவது அவசர சிகிச்சை பெறுவதென்றால் குமாரபாளையம் நகர பகுதிக்குள் வந்துதான் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. இதனால் இப்பகுதி  மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

ஆகையால் தாங்கள் இடத்தினை ஆய்வு செய்து பொதுமக்களின் நலன் கருதி ஆரம்ப சுகாதார நிலையம்  அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News