மக்கள் நீதி மையம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு மகளிர் தினம் முன்னிட்டு சீல்டு வழங்கப்பட்டது

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மையம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு மகளிர் தினம் முன்னிட்டு சீல்டு வழங்கப்பட்டது

Update: 2024-02-28 11:10 GMT

மாவட்ட ஆட்சியருக்கு மகளிர் தினம் முன்னிட்டு சீல்டு வழங்கப்பட்டது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில்  சிறந்த சேவையாற்றி வரும் மாவட்ட கலெக்டருக்கு , மகளிர் தினத்தையொட்டி ஷீல்டு வழங்கப்பட்டது. நாமக்கல் கலெக்டர் மருத்துவர் உமா நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றது முதல், கோரிக்கை விடுக்கும் நபர் யாராக இருந்தாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த செயல் அனைவருக்கும் மன நிறைவை தருவதாக உள்ளது. இவரது சேவையை பாராட்டி, நாமக்கல் மாவட்ட மகளிரணி மக்கள் நீதி மையம் அமைப்பாளர் சித்ரா தலைமையில், குமாரபாளையம் வந்த நாமக்கல் கலெக்டர் உமாவிற்கு ஷீல்டு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். நிர்வாகிகள் ரேவதி, உஷா, சுஜாதா, விமலா, மல்லிகா உள்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News