ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் நவீன கழிப்பறை வசதி
பாலமேடு முன்மாதிரி அரசு மேல்நிலை பள்ளியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை வசதி மேற்கொள்ளப்பட்டது.
By : King 24X7 News (B)
Update: 2024-06-19 13:56 GMT
அலங்காநல்லூர், ஜூன்.20- மதுரை மாவட்டம் பாலமேடு அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் மதுரை மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் பேராமௌன்ட் டெக்ஸ்டைல் மில்ஸ் சார்பில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் 12 அறைகள் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை திறப்பு விழா நடைபெற்றது.
இதற்கு மதுரை மேற்கு ரோட்டரி சங்க தலைவர் ஹனிப் தயூப் தலைமை தாங்கினார். ரோட்டரி(3000) மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். ரோட்டரி சங்க செயலாளர் ஆர்த்தி சுரேஷ், பள்ளி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு, ரோட்டரி கிளப் நிர்வாகி பொன்குமார், சமூக சேவை பொறுப்பாளர் பழனியப்பன் உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள், பாலமேடு மடத்து கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.