ஐஜேகே நிர்வாகி காரில் பணம் - புரளியால் ஏமாந்த பறக்கும்படையினர்

முசிறியில் ஐஜேகே கட்சி அலுவலகம் முன்பாக நிறுத்தி இருந்த காரில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக திமுகவினர் கிளப்பிவிட்ட புரளியால் பரபரப்பு நிலவியது. காரை சோதனை செய்த தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் காரில் பணம் இல்லாததால் ஏமாற்றுத்துடன் திரும்பினார்.

Update: 2024-04-18 02:35 GMT

பறக்கும்படையினர் சோதனை  

திருச்சி மாவட்டம் முசிறியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் ஐஜேகே கட்சியின் சார்பில் போட்டியிடும் பாரிவேந்தரின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் அருகே இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஆத்தூர் ராம் என்பவரின் கார் நின்று கொண்டிருந்தது. அந்த காருக்குள் கட்டுக்கட்டாக வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் இருப்பதாக திமுகவினர் தேர்தல் ஆணையத்திற்கு போன் மூலம் புகார் செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த தேர்தல் பறக்கும் படையினர் காரை சுற்றி வளைத்து சோதனை செய்தனர். சோதனையில் கார் உள்ளே பணம் எதுவும் இல்லாததால் திமுகவினரும் தேர்தல் பறக்கும் படையினரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த சோதனை காரணமாக அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது .ஐஜேகேவினர் பணம் வைத்திருப்பதாக திமுகவினர் புகார் கூறி பணம் கைப்பற்றாத சம்பவம் இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே தொட்டியத்தில் ஐஜேகே கட்சியினர் தங்கி இருந்த லாட்ஜில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படையினர், போலீசார் சென்று சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News