பணம் கையாடல்: இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் கைது

கோவில் நிதி 86 லட்சம் கையாடல் செய்த இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் பால்வண்ணன் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-05-13 16:09 GMT

கோவில் நிதி 86 லட்சம் கையாடல் செய்த இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் பால்வண்ணன் கைது செய்யப்பட்டார்.


ஊத்தங்கரையில் கோவில் நிதி 86 லட்சம் கையாடல் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்ட இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளராக பால்வண்ணன் வயது 57 என்பவர் கடந்த 2021 ஆண்டு முதல் 2023 டிசம்பர் மாதம் 11ஆம் தேதி வரை பணியாற்றி வந்தார். இவரது கட்டுப்பாட்டில் 43 திருக்கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களின் வைப்புநிதி மற்றும் புனரமைப்பு நிதி 86 லட்சத்து 6000 ரூபாய்களை கையாடல் செய்ததாக கிருஷ்ணகிரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பொறுப்பு ஜோதிலட்சுமி மற்றும் ஊத்தங்கரை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் வெங்கடாசலம் ஆகியோர் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் கடந்த மார்ச் மாதத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஊத்தங்கரை வந்த முன்னால் ஆய்வாளர் பால்வண்ணனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News