மேல்மலையனூர் அருகே வாலிபரிடம் நூதன முறையில் பணம் அபேஸ்!!
மேல்மலையனூர் அருகே ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்தவரிடம் இருந்து மர்ம நபர்களை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுர்த்தியுள்ளது.
By : King 24x7 Desk
Update: 2023-12-02 09:54 GMT
திருவண்ணாமலை மாவட்டம் வேடந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் மகன் அன்பரசன் இவர் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே மங்களம் சாலையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது அங்கி ருந்த ஏ.டி.எம். எந்திரத்தில் தனது கார்டை செலுத்தி ரூ.24 ஆயி ரத்தை எடுப்பதற்காக ரகசிய குறியீடு எண்ணை அழுத்தியுள்ளார், அப்போது அருகில் இருந்த நபர் ஒருவர், திடீரென தன்னிடம் இருந்த ஏ.டி.எம். கார்டை அன்பரசன் காலுக்கு அருகில் கீழே போட்டுள்ளார். இதையடுத்து அன்பரசன், அந்த கார்டை எடுப்பதற்காக குனிந்துள்ளார். அதற்குள் அந்த நபர் ஏ.டி.எம். எந்திரத்தில் வந்த ரூ.24 ஆயிரத்தையும், அன்பரசன் செலுத்தி வைத்திருந்த ஏ.டி.எம். கார்டையும் எடுத்துக்கொண்டு வேறொரு கார்டை அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் வைத்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார், இதையடுத்து அன்பரசன் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த கார்டை எடுத்து பார்த்தபோது அது தன்னுடையது இல்லை என்பதும், தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.24 ஆயிரம் எடுக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. மேலும் அந்த நபர், ஏ.டி.எம். கார்டை கீழே போட்டு தனது கவனத்தை திசை திருப்பி பணத்தை அபேஸ் செய்து சென்றிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை அபேஸ் செய்து சென்ற நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.