காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் பணம் பட்டுவாடா

காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் பணம் பட்டுவாடா செய்த இருவர் மீது வழக்கு பதிவு.

Update: 2024-04-01 08:31 GMT

பணம் பட்டுவாடா

சிவகங்கை காரைக்குடி அருகே உள்ள கல்லலில் நேற்று முன்தினம் நடைபெற்ற காங்கிரஸ் தோழமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திமுக தமிழரசி, ஆகியோர் கலந்து கொண்டனர்.‌ கூட்டம் நிறைவு பெற்ற பின் கலந்து கொண்ட அனைவருக்கும் ரூபாய் 200 பணம் விநியோகம் செய்யப்பட்டதாக வீடியோ வைரலானது. இதனையடுத்து கிராம நிர்வாக அதிகாரி புகாரின் பேரில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி, திமுக கல்லல் ஒன்றிய அவைத் தலைவர் வடிவேலு ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
Tags:    

Similar News