நகர பகுதிக்குள் வந்த குரங்குகள் - பொதுமக்கள் அச்சம்
ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு குரங்குகள் பொள்ளாச்சி நகர் பகுதியில் உள்ள மாக்கினாம்பட்டியில் சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆழியாறு வால்பாறை நவமலை உள்ளிட்ட வன குரங்குகள் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் வனப் பகுதியில் இருந்து வழி தவறி வெளியேறிய இரண்டு குரங்குகள் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி பகுதியில் புகுந்து சுற்றி திரிகிறது.இப்பகுதியில் 1000.க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன இங்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் மக்கள் வசித்து வருகின்றனர்.
இன்று காலை ஜோதி நகரில் பகுதியில் சுற்றி திரிந்த இந்த குரங்குகள் தற்போது மாக்கினாம்பட்டி பகுதிக்குள் நுழைந்து சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீட்டின் கதவுகளை பூட்டி கொண்டனர். மேலும் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை பாதுகாப்பாக வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர்.. வனப்பகுதியிலிருந்து வழி தவறி ஊருக்குள் நுழைந்த குரங்குகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இந்த குரங்குகளை தெரு நாய்கள் சுற்றியும் துரத்தி வருவதால் இந்த குரங்குகளின் பாதுகாப்பு நலம் கருதி உடனடியாக வனத்துறையினர் இரண்டு குரங்குகளையும் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டுமென மாக்கினாம்பட்டி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.