பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரைக் குடித்த குரங்குகள்

மதுராந்தகத்தில் ஆங்காங்கே வீசப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து குரங்குகள் தண்ணீரை குடிக்கும் அவலநிலை அரங்கேறியுள்ளது.

Update: 2024-04-29 08:55 GMT

கோடை காலம் இப்பொழுது வாட்டி வதைக்க துவங்கியிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக இன்று அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதற்கேற்றார் போல் கடந்த ஒரு வார காலமாக கடும் வெப்பம் வாட்டி வதைக்கிறது . பொதுமக்கள் மட்டுமில்லாமல் இதனால் விலங்குகள் பறவைகள் உள்ளிட்ட சக உயிரினங்களும் கடும் பாதிப்படைந்து இருக்கின்றன. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் காவல் நிலையம் அருகே இரண்டு குரங்குகள் மனிதர்கள் குடித்துவிட்டு வீசி சென்ற , பாட்டில்களில் இருந்த குடிநீரை எடுத்து குடித்த சம்பவம் அதை பார்த்த பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் வாங்கி குடிப்பது அதிகரிக்கும் நிலையில் அவற்றை முறையாக பொதுமக்கள் குப்பைத்தொட்டி இல்லையோ அல்லது மறுசுழற்சி செய்யும் இடத்திலையும் போடுவது கிடையாது மாறாக கண்ணில் படும் இடங்களில் வீசு சென்று விடுகிறார்கள். அவ்வாறு வீசி சென்ற பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்த குரங்குகள் அவற்றில் இருந்த தண்ணீரை குடிப்பதற்காக அதன் மூடிகளை திறக்க முடியாமல் பல்லால் கடித்து துளையிட்டு, தண்ணீர் குடித்தது அங்கிருந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. மனிதன் செய்யும் தவறுகளால் இயற்கையில் இருக்கும் சக உயிர்களும் கடும் அவதியை சந்தித்து வருவது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News