ஊர்க்காவல் படையினருக்கு அதிக நாட்கள் பணி: டிஜிபி வன்னியபெருமாள் தகவல்

ஊர்க்காவல் படையினருக்கு, அதிக நாட்கள் பணி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக டிஜிபி வன்னியபெருமாள் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-08 09:18 GMT

பாராட்டு சான்றிதழ் வழங்கல் 

தமிழ்நாடு முழுவதும் ஊர்க்காவல் படையினருக்கு, அதிக நாட்கள் பணி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசிடம் அறிக்கை அனுப்பியுள்ளோம் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி வன்னிய பெருமாள் பெரம்பலூரில் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் திருச்சி சரக ஊர் காவல் படை தின விழா பெரம்பலூர் அருகே உள்ள நாரணமங்கலம் தனியார் உதவி பெறும் பள்ளியில்மார்ச் 7ஆம் தேதி பகல் ஒரு மணியளவில் நடைபெற்றது. இந்த விழாவில் குடிமை பாதுகாப்பு மற்றும் தமிழ்நாடு ஊர்க்காவல் படை காவல் துறை இயக்குனர் வன்னிய பெருமாள் கலந்து கொண்டு ஊர்காவல் படையினரின் பணிகள், அவர்களின் அர்ப்பணிப்புகள்,

காவல்துறையினருக்கு இணையாக அவர்களோடு பொதுமக்களுக்காக பணியாற்றும் அவர்களின் செயல்பாடுகள் குறித்து பாராட்டி பேசினார். தொடர்ந்து தமிழ்நாடு அரசிடம் ஊர்க்காவல் படையினக்காக பல்வேறு சலுகைகளை பெற்று தரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி சரக காவல்துறை தலைவர் மனோகர், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி, ஊர்க்காவல் படை சரக உதவி தளபதி ராஜன் உள்ளிட்டோர் பேசினர்.

தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய ஊர்க்காவல் படையினர் மற்றும் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சியில் காவல்துறை அலுவலர்கள், ஊர்க்காவல் படை அலுவலர்கள், பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News