பெண்கள் வள்ளி கும்மி நடனம் ஆடி வழிபாடு !
பழனி பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. இந்நிலையில் பழனி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பழனி கிரிவலப் பாதையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் வள்ளி கும்மி நடனம் ஆடி வழிபாடு செய்தது.
By : King 24x7 Angel
Update: 2024-03-19 07:31 GMT
பழனி பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடி மற்றும் பால் காவடி , பன்னீர் காவடியுடன் பழநி நோக்கி பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இதனால் பழனி விழா கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில் கொடுமுடி தீர்த்தக்காவடி குழுவினரும் நடைப்பயணத்தை துவக்கி விட்டனர். திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் பங்குனி உத்திர திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ஏராளமான வசதிகள் செய்வதற்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது. வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் நிழல் பந்தல்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.இந்நிலையில் பழனி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பழனி கிரிவலப் பாதையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் வள்ளி கும்மி நடனம் ஆடி வழிபாடு செய்தது.