50க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள் பறிமுதல்
திண்டுக்கல் நகர் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள் பறிமுதல் செய்யப்பட்டன .
Update: 2024-05-18 12:16 GMT
திண்டுக்கல் நகர் வாகனம் அதிகம் செல்லக்கூடிய பகுதியில் பொதுமக்களுக்கு இடையுறாக சாலையின் நடுவே 50க்கும் மேற்பட்ட பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இதையறிந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சனாமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் போக்குவரத்துக்கு இடையுறாய் இருந்தவற்றை பறிமுதல் செய்தனர். மும்பையில் ஏற்பட்ட விபத்து மற்றும் உயிர்ப்பலி குறித்து பொதுமக்களிடம் வியாபாரிகளிடமும் விளக்கினர். மேலும் விளம்பரங்கள் வைப்பதாக இருந்தால் அரசின் விதிகளுக்கு கட்டுப்பட்டு திண்டுக்கல் மாநகராட்சியில் உரிய அனுமதி வாங்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத இடத்தில் வைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.