ஓராண்டில் ரயிலில் அடிப்பட்டு 100 பேர் பலி - வெளியான அதிர்ச்சி தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 100க்கும் மேற்பட்டவர்கள் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளதாக தகவல்.

Update: 2024-02-28 11:01 GMT

ரயில் விபத்து பலி 

தமிழகத்தில் ரயில் போக்குவரத்து அதிகம் உள்ள மாவட்டங்களில் திண்டுக்கல் ஒன்றாகும். இம்மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி, வடமதுரை, அய்யலூர், கொடைரோடு, அம்பாத்துறை ஆகிய ஊர்களில் ரயில் நிலையங்கள் உள்ளன.

இந்நிலையில் தண்டவாளத்தை கடக்க முயலும் மனிதர்கள், ஆடுகள், மாடுகள் ரயிலில் அடிபட்டு இறப்பது அடிக்கடி நிகழ்கிறது. இதுதொடர்பாக ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் விபத்துகள் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டில் 100க்கும் மேற்பட்டவர்கள் ரயிலில் அடிபட்டு இறந்து உள்ளனர்.

அதில், 17 பேர் அடையாளம் தெரியவில்லை. எனினும், 17 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, ரயில்வே போலீசாரால் அடக்கம் செய்யப்பட்டுவிட்டன.

Tags:    

Similar News