தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி !
திருப்பத்தூர் அடுத்த இலக்கிநாயக்கன்பட்டி கிராமத்தில் தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
By : King 24x7 Angel
Update: 2024-07-16 06:47 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த இலக்கிநாயக்கன்பட்டி கிராமத்தில் தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த இலக்கிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த தவமணி மனைவி ரஞ்சிதா வயது 55 இவர் தன்னுடைய நிலத்தின் அருகே அமர்ந்து கொண்டிருக்கும் போது நிலத்தில் இருந்த தென்னை மர ஓலை காற்றின் வேகத்தால் விழுந்ததில் தென்னைமரம் ஓலையில் இருந்து தேனீக்கள் நான்கா பக்கமும் சிதறி பறந்தன தற்போது மூதாட்டி ரஞ்சிதாவை தேனீக்கள் கொட்டியதில் மயங்கி விழுந்தால் இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.