திருவட்டாரில் மோட்டார் சைக்கிள் திருட்டு.  ஒருவர் கைது.

திருவட்டாரில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2023-12-08 10:27 GMT
கைதான ஜோஸ்லின்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே  அருவிக்கரை பகுதி மாத்தூர் செம்மண்விளை வீட்டை சேர்ந்தவர் குமார் (46). திருவட்டார் அரசு போக்கு வரத்துக் கழக பணிமனையில் கண்டக்டராக பணியாற்றுகிறார். இவர் கடந்த 3ம் தேதி அன்று புத்தன்கடையில் உள்ள உறவினரின் இறப்பு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில்சென்றார்.       

  வெளியே வண்டியை நிறுத்தி விட்டு, மரண வீட்டுக்கு சென்று திரும்பி வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை . பல இடங்களில் தேடியும் பைக்கை காணாததால் திருவட்டார் போலீசில் புகார் செய்தார்.         திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வண்டியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் காங்கரை சந்திப்பில் நடந்த வாகன சோதனையின் போது, ஆற்றூர் நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை பரிசோதித்த போது அது குமாரின் பைக் என தெரிந்தது. பைக்கை ஓட்டி வந்த மலவிளை முள்ளுவிளை  யைச் சேர்ந்த ஜோஸ்லின் நேசகுமார் (40) என்பவரை  கைது செய்தனர். தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News