மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - தொழிலாளி சாவு

Update: 2023-12-06 08:51 GMT

உயிரிழப்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (45). இவர் சேலத்தில் உள்ள எலக்ட்ரிக் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அயோத்தியாப்பட்டணம் அருகே வெள்ளியம்பட்டி பகுதியில் உள்ள அவரது முதலாளி தோட்டத்திற்கு தன்னுடன் வேலை பார்க்கும் சக்திவேல் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். கார்த்திகேயன் மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் அமர்ந்து இருந்தார். வெள்ளியம்பட்டி அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கார்த்திகேயன் உள்பட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திகேயன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News