விழுப்புரம்: சாலையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி

காலை 8 மணிக்கு பின் பனி விலக்தியதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்

Update: 2023-12-08 01:19 GMT

பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மிக்ஜம் புயலால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. மேலும் இரவில் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர், இந்த நிலையில் திடீரென பருவநிலை மாற்றம் அடைந்துள்ளதால் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் பகுதியில் இன்று காலை கடும் பனிமூட்டம் காணப்பட்டது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சாலையில் சென்றதை காணமுடிந்தது, குறிப்பாக அதிகாலையில் சாலையே தெரியாத அளவுக்கு பனிமூட் டம் இருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர், இந்த பனிமூட்டம் காலை 8.30 மணி வரை நீடித்தது. அதன்பிறகு பனி விலகி, வெயில் அடிக்க தொடங்கியதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.
Tags:    

Similar News