சாலையில் நிற்கும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் நிற்கும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதிகுள்ளாகி வருகின்றனர்.;

Update: 2023-12-23 10:52 GMT

சாலையில் சுற்றி திரியும் மாடுகள்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு பகுதியில் மாடு வளர்ப்போர், தங்களது மாடுகளை வீட்டில் கட்டி வைத்து பராமரிக்காமல் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டு விடுகின்றனர்.

இந்த மாடுகள், திருக்காலிமேடு பிரதான சாலை, ஆனந்தாபேட்டை, ரெட்டிபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உணவுக்காக சுற்றித் திரிகின்றன. சாலையின் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் மாடுகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

மேலும், பாதசாரிகளும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள், திருக்காலிமேடு பிரதான சாலைகளில், காலை மற்றும் மாலை நேரங்களில் ஆய்வு செய்து, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்."

Tags:    

Similar News