மணல் திருட்டை தடுக்கக்கோரி எம்.பி., தர்ணா

மணல் திருட்டை தடுக்கக்கோரி நாமக்கல் எம்.பி., சின்ராசு, பரமத்தி வேலூர் போலீஸ் ஸ்டேஷனில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Update: 2024-03-12 10:48 GMT

மணல் திருட்டை தடுக்கக்கோரி நாமக்கல் எம்.பி., சின்ராசு, பரமத்தி வேலூர் போலீஸ் ஸ்டேஷனில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.  

பரமத்தி வேலூர் காவிரி கரையோர பகுதிகளில் மணல் கொள்ளையில் அதிக அளவில் ஈடுபடுவதாக அதை தடுக்கக்கோரி பலமுறை  கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் பரமத்தி வேலூர் காவல் துறையினர் மணல் திருட்டில் ஈடுபடுபவர்களை தடுக்கவில்லை என கூறியும் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு வந்த பரமத்தி வேலூர் டி.எஸ்.பி சங்கீதா மற்றும் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்துனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராசு மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் நடவடிக்கை எடுக்க கூறி மனு கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றார். நேற்று மணல் திருட்டில் ஈடுபட்ட 3 மூன்று நபர்களை கைது செய்தது குறிப்பிடதக்கது.
Tags:    

Similar News