பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய கனிமொழி எம்பி

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.152.14 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் பாதாள சாக்கடைத் திட்ட பணிகளை கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

Update: 2024-03-17 06:09 GMT

அடிக்கல் நாட்டு விழா 

தூத்துக்குடி மாநகராட்சியில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.152.14 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாநகராட்சிக்கு ரூ.152.14 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டத்தை தந்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் . இத்திட்டம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு 8,000 வீடுகளுக்கு மேல் பயன்பெறக்கூடிய வகையில் நேரடியாக வீடுகளில் இருந்து கழிவு நீர் அகற்றப்பட்டு, சுத்திகரிப்பு செய்து அந்த வளாகத்தின் அருகில் உள்ள செடிகள், மரங்களுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுப்புறச்சூழலை பேணி காப்பதோடு இந்த பகுதியை சுகாதாரமாக வைப்பதற்கும் இத்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டம் அம்ரூத் 20 நிதியின் கீழ் மத்திய அரசின் பங்காக ரூ.45.44 கோடி, மாநில அரசின் பங்காக ரூ 41.31 கோடி மற்றும் உள்ளாட்சி பங்களிப்பு மூலம் ரூ.65.39 கோடி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்பட உள்ளது. இந்திட்டத்திற்கான பணி ஆணை 22.02.2024 அன்று வழங்கப்பட்டது. மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் இத்திட்டத்தில் அடங்கிய 5 வார்டுகளின் ஆரம்ப நிலை (2024), நடுநிலை (2039) மற்றும் உச்சகட்ட (2054) மக்கள் தொகை முறையே 37874, 46742 மற்றும் 55375 ஆகவும், அதற்கேற்ப வெளியேற்றப்படும் கழிவுநீர் அளவு நாளொன்றிற்கு முறையே 4.36, 5.38 மற்றும் 6.37 மில்லியன் லிட்டர் ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News