மாணவர்களுடன் எம்.பி கார்த்திக் சிதம்பரம் கலந்துரையாடல்
காரைக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் அரசியல் குறித்து மாணவர்களுடன் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கலந்துரையாடினார்.;
Update: 2024-03-08 06:30 GMT
கலந்துரையாடல்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தனியார் திருமண மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கல்லூரி மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார். சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி, கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று நாட்டின் அரசியல் சூழ்நிலைகள், சட்டப்பிரச்சினைகள், அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு கார்த்திக் சிதம்பரம் விளக்கமாக பதில் அளித்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பூமி பூஜை குறித்து கேள்வி எழுப்பிய மாணவிக்கு பதில் அளித்த கார்த்தி சிதம்பரம் அது தேர்தலுக்காக செய்யப்பட்ட ஒரு நிகழ்வு என்று கூறினார்.