குடிநீர் மையங்கள் அமைக்க தனது சொந்த நிதி வழங்கிய எம்பி
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைக்க தனது சொந்த நிதியை எம்பி வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைக்க தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஐம்பது லட்சத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய பெரம்பலூர் நாடாளுமன் உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கற்பகத்தை சந்தித்த பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் பெரம்பலூர் மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்மையங்கள் அமைப்பதற்காக தனது சொந்த நிதியிலிருந்து டூ 50 லட்சம் காசோலையை வழங்கினார்.
இதனையடுத்து பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் வேட்டை நாயக்கர்கள் சமூக பொதுமக்களின் கோரிக்கையான வேட்டை நாய் மூலம் முயலை வேட்டையாடி ஜக்கம்மா என்ற குல வழிபாட்டை செய்வதற்காக வன விலங்குகளிலிருந்து முயலையும், வேட்டை நாயையும் நீக்கி தர கோரிக்கை வைத்ததையது தொடர்ந்து புது தில்லியில் இதற்கான துறை மத்திய அமைச்சரை சந்தித்து வனவிலங்குகளிலிருதுநீக்கி இதற்கான ஆணை பெற்று தந்துளாதவுகவும்,
அதற்கான ஆணை யை மாவட்ட ஆட்சியரின் வழியாக இப்பகுதி மக்கள் வேட்டையாடி திருவிழா கொண்டாட அனுமதி வழங்க வேண்டும் அதற்கான கோரிக்கை கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதனையடுத்து செய்தியாளரை சந்தித்த டாக்டர் பாரிவேந்தர் கூறியதாதவது திமுக அரசு குடும்ப ஆட்சி நடத்தி வருவதாகவும். மக்கள் வரிப்பணத்தில் இலவசம் தருவதாக கூறி ஒட்டு வாங்குவதற்கு அதற்கான வேலையை செய்து வருவதாகவும், இவர்கள் மதுக்கடைகள் மூலம் வரும் வருவாய் மூலம் கொள்ளையடித்து,
ஊழல் செய்து ஆட்சி நடத்துவதாகவும், மதுக்கடைகளை நிறுத்தினாலே மக்கள் நல்ல முறையில் வாழ்வார்கள் என தெரிவித்தனர். I J K தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் , நான் (அ) எனது கட்சியை சார்ந்தவர்கள் போட்டியிடுவதாக தெரிவித்தர்.