புதிய கட்டங்களை திறந்து வைத்தார் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள்

நாமக்கல் / ராசிபுரம்
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் ரூ.60.95 இலட்சம் மதிப்பீட்டில் 2 புதிய கட்டங்களை திறந்து வைத்து, ரூ.9.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், என்.புதுப்பட்டி மற்றும் நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், பெரியாகவுண்டம்பாளையத்தில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் இன்று (14.12.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் சஉமா இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.பெராமலிங்கம் (நாமக்கல்) அவர்கள், திருகு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்) அவர்கள் ஆகியோர் முன்னிலையில் ரூ.60.95 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு ஊராட்சி மன்ற அலுவலகங்களை திறந்து வைத்து, ரூ.9.80 இலட்சம் மதிப்பீட்டில் என். புதுப்பட்டியில் புதியதாக கிராம நிர்வாக அலுவலக கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அரசு அலுவலக கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி செயலகம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்கள். புதிய சாலைகள் அமைத்தல், சாலை மேம்பாட்டு பணிகள் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதியில் என்.புதுப்பட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13.00 இலட்சம் மதிப்பில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மகளிர் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டுபெண்கள் பயன்பெறும் வகையில் மகளிருக்கு பேருந்துகளில் இலவச விடியல் பயணம், மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1000/- வழங்கும் திட்டம், 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, மகளிர் சுய தொழில் தொடங்கிட கடனுதவி, பெண்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவித்திட மாதம் ரூ.1000/- வழங்கும் புதுமைப் பெண் திட்டம்.

மாணவர்களுக்கு மாதம் ரூ.1000/- வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம், ஏழை, எளிய குழந்தைகளின் பசியினை போக்கிட பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள். மேலும், பொதுவிநியோக கடைகளில் தரமான உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. இன்றைய தினம் மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் 6 கட்டண பேருந்துகள் இலவச பயண பேருந்துகளாக திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மகளிர் நகர பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ள முடியும்.
இன்றைய தினம் மோகனூர் வட்டம். என்.புதுப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் 15- வது மத்திய நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.3155 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், பெரியாகவுண்டம்பாளையத்தில் ரூ.29.40 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9.80 இலட்சம் மதிப்பில் கிராம நிர்வாக அலுவலகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார்.