குடிநீரைக் காய்ச்சிப் பருக நகராட்சி அறிவுறுத்தல்
மழை காலங்களில் ஏற்படும் நோய்களில் இருந்து காத்துக்கொள்ள குடிநீரைக் காய்ச்சிப் பருகுமாறு பொதுமக்களை சுரண்டை நகராட்சி தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
Update: 2023-12-28 03:28 GMT
தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில் பொதுமக்கள் குடிநீரைக் காய்ச்சிப் பருக வேண்டும் என, நகா்மன்றத் தலைவா் வள்ளிமுருகன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அண்மையில் பெய்த கனமழையால் நகராட்சிப் பகுதியில் குடிநீா் விநியோகப் பணி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மழைக் காலங்களில் பரவும் நோய்களிலிருந்து பொதுமக்கள் தங்களைக் காத்துக்கொள்ள குடிநீரைக் காய்ச்சிப் பருக வேண்டும். டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் வகையில், நகராட்சி சாா்பில் அனைத்துப் பகுதிகளிலும் நிலவேம்புக் குடிநீா் வழங்கும் பணியும், கொசு மருத்து தெளிக்கும் பணியும் நடைபெறுகிறது. சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்படும் பொது சுகாதாரப் பணிகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.