முத்துமலை முருகன் கோவில் பயணியர் நிழற்குடை திறப்பு விழா
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முத்துமலை முருகன் கோவில் அருகே புதியதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்க்கூடம் திறப்பு விழா நடைப்பெற்றது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் உள்ள 146 அடி உயரமுள்ள முத்துமலை முருகன் கோவிலில் பல்வேறு மாநிலம் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வாடிக்கையாகி விட்ட நிலையில் தற்பொழுது கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற எம்பி பொன் கௌதம சிகாமணி அவர்களின் நிதியிலிருந்து பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதையொட்டி அப்பகுதியில் 30 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிழல் கூடம் அமைக்கப்பட்டது.
அதனை இன்று ஏத்தாப்பூர் பேரூராட்சி தலைவர் அன்பழகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் பாபு என்ற வெங்கடேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சோமசுந்தரம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவராமன், வார்டு கவுன்சிலர்கள் மணிகண்டன், ராஜா, ஆனந்த் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் மேலும் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.