முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா !
பள்ளிபேட்டை ஊராட்சி மின்வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
By : King 24x7 Angel
Update: 2024-03-15 05:02 GMT
மதுராந்தகம் பள்ளிபேட்டை ஊராட்சியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே மின்வாரிய அலுவலகம் குடியிருப்பு பகுதியில் 50 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் மூலவர், கோயிலின் முன்புற மண்டபம், கோயில் கோபுரம், மூலவர் விமானம் உள்ளிட்டவை கிராம மக்கள் ஒத்துழைப்புடன் புனரமைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டன. விழாவிற்காக அமைக்கப்பட்ட யாகசாலையில் கடந்த 12ஆம் தேதி காலை விக்னேஸ்வரர் பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து, 13 தேதி 14ஆம் தேதிகளில் வேத விற்பன்னர்களால் வேத மந்திரங்கள் முழங்க மூன்று கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. விழாவன்று நாளை நான்காம் கால பூஜையும் கடந்த பின்னர் யாகசாலையில் இருந்து கலச கும்பங்கள் புறப்பட்டு மூலவர் விமானம் கோயில் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் மகா அபிஷேகமும் சிறப்பு அலங்கார ஆராதனையும் நடந்தன. அதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.