பாப்பிரெட்டிப்பட்டி அருகே மர்மமாக உயிரிழந்த ஓட்டுநர்: உறவினர்கள் முற்றுகை
பாப்பிரெட்டிப்பட்டி அருகே தாயம் விளையாடிய போது ஓட்டுநர் மர்மமாக உயிரிழந்ததை தொடர்ந்து,நடவடிக்கை எடுக்கக்கோரி பொம்மிடி காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொம்மிடி அடுத்த பண்டாரசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் ஓட்டுநர். இவர் கடந்த 24-ந் தேதி நாகர்கிணறு அருகே திப்பிரெட்டிஅள்ளி பகுதியை சேர்ந்த பெரியசாமி,சதீஷ், ஆகியோருடன் தாயம் விளையாடி கொண்டிருந் கார்.
அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கிருஷ்ணன் வாந்தி எடுத்தார். பின்னர் மயக்கம் வருவதாக கூறியதையடுத்து உறவினர்கள்,
பொம்மிடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் உயிரிழந்தார். இதுகுறித்து மனைவி கல்பனா கொடுத்த புகாரின் பேரில் பொம்மிடி போலீசார் சந்தேகம் மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் கல்பனா மற்றும் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பொம்மிடி போலீஸ் நிலையத்தில் திரண்டனர். பின்னர் கிருஷ்ணன் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். தாயம் விளையாடிய இடத்தில் விசாரிக்க வேண்டும் எனக்கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் மற்றும் போலீசார் தி அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் கிருஷ்ணனை தாக்கியவர் களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.இதற்கிடையே அரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகநாதன் கல்பனாவிடம் நேரில் விசாரணை மேற்க்கொண்டார். மேலும் பெரியசாமி, சதீஷ் ஆகியோரிடம் பொம்மிடி காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.