திருமருகலில் நாகை நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம்

திருமருகலில் நாகை நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-13 18:22 GMT

வேட்பாளர் அறிமுக கூட்டம்

திருமருகலில் நாகை நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம நாகை மாவட்டம் திருமருகலில் நாகை நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் தலைமை தாங்கி நாகை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கோவையை சேர்ந்த பெண் பொறியாளர் கார்த்திகாவை அக்கட்சியினர் மத்தியில் அறிமுகப்படுத்தினார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன்,மாநில மகளிரணி பாசறை அஞ்சம்மாள்,தொகுதி செயலாளர் ஆதித்தன்,தொகுதி தலைவர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அனீஸ் பாத்திமா,மாநில கொள்கை பரப்பு செயலாளர் அசுரன் சரவணன் ஆகியோர் வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசினார்.

அப்போது பேசிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா:- நாகை மாவட்டத்தை இந்தியாவின் முன்மாதிரியான மாவட்டமாக மாற்றுவேன்,காவிரி பிரச்சனையை தீர்ப்பேன்,கட்ச தீவு மீட்புக்கு குரல் கொடுப்பேன்,மீனவர் பிரச்சனையை தீர்ப்பேன்,அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்,திருமருகல் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் நிரப்ப நடவடிக்கை எடுப்பேன்,தொழிற்சாலை அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவேன் என்றார்.மேலும் நாகை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் தமக்கு, மக்கள் வாய்ப்பளித்து, மாற்றத்திற்காக, வாக்களிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Tags:    

Similar News