நடுக்கோம்பை: ரூ.4.94 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை பணிகள் துவக்கம்

நடுக்கோம்பையில் ரூ.4.94 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை பணிகள் துவக்கம்;

Update: 2023-12-07 14:18 GMT

நடுக்கோம்பையில் ரூ.4.94 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை பணிகள் துவக்கம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேந்தமங்கலம், டிச. 7 சேந்தமங்கலம் யூனியன் நடுக்கோம்பை பஞ்., எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் அயோத்தி தாசர் பண்டிதர் குக்கிராமம் மேம்பாட்டுத்திட்டத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு துவக்க விழா நடந்தது. விழாவிற்கு அட்மா குழு தலைவர் அசோக்குமார், பஞ்., தலைவர் விஜயபிரகாஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். எம்.எல்.ஏ., பொன்னுசாமி பங்கேற்று, எம்.ஜி.ஆர்., நகரில் பாண்டியன் வீடு முதல் சின்னப்பிள்ளை வீடு, தேவேந்திரர் தெருவில் மணி வீடு முதல் வைகாசி வீடு வரை அயோத்தி தாசர் பண்டிதர் குக்கிராமம் மேம்பாட்டுத்திட்டத்தில் ரூ.4.94 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.

விழாவில் யூனியன் சேர்மேன் மணிமாலா, துணைத்தலைவர் கீதா, பஞ்., துணைத்தலைவர் கலாமணி, நகர செயலாளர் முருகேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஆனந்த்பாபு, வார்டு கவுன்சிலர்கள், ஒப்பந்ததாரர் சந்தோஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News