நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 1.19 கோடிக்கு பருத்தி ஏலம்
நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் RCH ரகம் ரூ. 5,369 முதல் ரூ.7,695 வரையிலும், மட்ட ரகம் ரூ. 4,315 முதல் ரூ. 5,999 வரையிலும் என மொத்தம் ரூ. 1.19 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.;
Update: 2024-02-07 07:31 GMT
பருத்தி ஏலம்
நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 4,750 மூட்டை பருத்தி ரூ. 1.19 கோடி மதிப்பில் ஏல விற்பனை நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்படுகிறது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். பிப்ரவரி 6 ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 4,750 மூட்டை பருத்தி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இவற்றில் RCH ரகம் ரூ. 5,369 முதல் ரூ.7,695 வரையிலும், மட்ட ரகம் ரூ. 4,315 முதல் ரூ. 5,999 வரையிலும் என மொத்தம் ரூ. 1.19 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.