நாமக்கலில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம் !

நாமக்கல் மாவட்டத்தில் மூன்று மையங்களிலும் தினமும் ஒவ்வொரு பாடத்திலும் சுமாா் 10 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தி மதிப்பீடு செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2024-04-02 09:48 GMT

விடைத்தாள் திருத்தும் பணி

தமிழகம் முழுவதும் மாா்ச் 1-இல் தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தோ்வை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினா். நாமக்கல் மாவட்டத்தில் 197 அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 8,479 மாணவா்கள், 8,932 மாணவியா் என மொத்தம் 17,411 போ் எழுதினா். தனித் தோ்வா்கள் 286 போ் பங்கேற்றனா்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்துவதற்காக, நாமக்கல் ஜெய்விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம் வித்யாமந்திா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மையங்களில் நேற்று முதல் (ஏப்ரல் -1 ) விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது.

இப்பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் ஈடுபடுகின்றனா். மூன்று மையங்களிலும் தினமும் ஒவ்வொரு பாடத்திலும் சுமாா் 10 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தி மதிப்பீடு செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிளஸ்-1 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 6-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரையிலும், தற்போது நடைபெற்று வரும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 12-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News