நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் விழா

நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த தமிழ்க்கூடல் விழாவில் கவிஞர் நாணற்காடன் சிறப்புரை ஆற்றினார்.

Update: 2024-02-06 06:38 GMT


நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த தமிழ்க்கூடல் விழாவில் கவிஞர் நாணற்காடன் சிறப்புரை ஆற்றினார்.


நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தமிழ்க்கூடல் விழா -கவிஞர் நாணற்காடன் மாணவர்களிடையே பேசினார். நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் விழா நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பாக, தமிழ் மன்றம் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தமிழ்க்கூடல் விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பெரியண்ணன் தலைமை வகித்தார்.

முதுகலைப் பொருளியல் ஆசிரியர் ஜெகதீசன் வரவேற்றார். முதுகலைத் தமிழாசிரியர் ராமு, தமிழாசிரியர் அம்சவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக, எழுத்தாளரும், கவிஞருமான நாணற்காடன் கலந்து கொண்டு மாணவர்கள் நாள்தோறும் புத்தகம் வாசிக்க வேண்டும் என்பதையும், தினமும் புத்தகம் படிப்பதால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துக் கூறினார்.

மேலும், பிற மொழியில் எழுதப்பட்ட மிகச்சிறந்த படைப்புகளைத் தமிழ் மொழி பேசுபவர்களும் அறிந்து கொள்ள மொழிபெயர்ப்பு மிகவும் உதவுகிறது என்பதையும் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு இலக்கியங்களையும் அவர் குறிப்பிட்டார். விழாவில் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றப் போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்பட்டன. திரளான மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முடிவில் தமிழாசிரியை நவமணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News