பிரதமர் மோடியை கண்டித்து மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் தாலி குறித்து தவறாக பேசிய பிரதமர் மோடியை கண்டித்து மகளிர் காங்கிரசார் தாலியை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
Update: 2024-05-01 02:37 GMT
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகளிர் காங்கிரசார்
நாமக்கல் பூங்கா சாலையில் மகளிர் காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடி மகளிர் அணியும் மங்களகரமான தாலியை பற்றி தவறாக பேசியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மகளிர் அணி செயலாளர் மகேஸ்வரி தலைமை வகித்தார் நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சித்திக் முன்னிலை வகித்தார் இதில் மகளிர் அணியும் மங்களகரமான தாலியை பற்றி தவறாக பேசிய பிரதமர் மோடியை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் மோகன் உள்ளிட்ட மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்