கனமழையால் இடிந்த நம்பியூர் பேரூராட்சி சுவர் !!!
கனமழையால் நம்பியூர் பேரூராட்சி சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-05-23 11:50 GMT
நம்பியூர் பேரூராட்சி சுவர்
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் நேற்று நள்ளிரவில் பலத்த கன மழை பெய்தது. கனமழையால் எலந்தூர் செட்டியம்பாளையம் குட்டை ஆகியவை நிரம்பியது. இதனால் குட்டைகளிலிருந்து வெளியேறிய மழைநீர் பெரியார் நகர் பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. கனமழையால் நம்பியூர் பேரூராட்சி சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மேலும் கனமழைகளால் ஓடைகளில் மரங்கள் மற்றும் குப்பைகள் அடித்து வரப்பட்டதால் அடைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்களை சரி செய்ய 75க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கால்வாயிலில் இறங்கி அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் பேரூராட்சி அலுவலகம் அருகே சாலை அரித்துள்ளதால் சாலைநின் ஓரத்திலிருந்த டிரானஸ்பார்மர் தொங்கி கொண்டு உள்ளது .