லக்ஷ்மி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேக விழா
குமாரபாளையம் அருகே லக்ஷ்மி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியில், விநாயகர், லக்ஷ்மி நரசிம்மர், ஆஞ்சநேயர், திருமங்கையாழ்வார், ஜய விஜயன், கருடாழ்வார் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
காவிரி ஆற்றிலிருந்து மேள தாளங்கள் முழங்க நடந்த தீர்த்தக்குட ஊர்வலத்தில், பெண்கள் மஞ்சள் ஆடையுடன் பெருமளவில் பங்கேற்றனர். நான்கு கால யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை 06:00 மணியளவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பல்லக்காபாளையத்தை சேர்ந்த செல்வகபிலன், செந்தில்வேலன் சிவாச்சாரியார்கள் மற்றும் குழுவினரால் யாக சாலை பூஜைகள், கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.