நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் - ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ்

நத்தம் பட்டா மாறுதலுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.;

Update: 2024-06-20 06:15 GMT

ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் 

நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானிடாம் வர்சீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருபதாவது நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்" தமிழ்நாடு முதலமைச்சரால்  04.03.20204 அன்று துவக்கி வைக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் இந்த நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் இ-சேவை (https://tamilnilam.tn.gov.in/citizen) மையம் மற்றும் வழியாக Citizen Portal விண்ணப்பிக்கலாம்.

Advertisement

அதனடிப்படையில், நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் இணையவழியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நத்தம் பட்டா வழங்கப்படும். மேலும், கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் மனை பட்டாக்களை (https://eservices.tn.gov.in) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். "நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்" நடைமுறைபடுத்தப்பட்ட வட்டங்களில் இ-சேவை மையம் மற்றும் Citizen Portal வாயிலாக பெறப்படும் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News