திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்லூரியில் தேசிய அளவிலான கலைத் திருவிழா

திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி குழுவத்தில் சார்பில் 'ரங்உத்சவ்' என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப கலைத் திருவிழா நேற்று துவங்கியது.

Update: 2024-02-16 10:40 GMT

திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி குழுவத்தில் சார்பில் 'ரங்உத்சவ்' என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப கலைத் திருவிழா நேற்று துவங்கியது. முதல் நாள் நிகழ்ச்சி கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் துவக்கி வைத்தார். பகல் நேர நிகழ்வாக 'ரங் அபிநவ்' நிகழ்வில் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த பயல் அரங்குகள் கண்காட்சிகளும் 'ரங்ஹூல்' நிகழ்வாக ஹேக்கத்தான், வினாடி வினா, கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுப் போட்டிகளும் 'ரங்மஜா' நிகழ்வாக ஆடை அலங்கார அணிவகுப்பு மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடர்ந்து புது தில்லி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் முதன்மை ஒருங்கிணைப்பு அலுவலர் மற்றும் அனுவதனி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் புத்தா சந்திரசேகர், இந்தியா லீட் சோசியல் இன்னோவேஷன் குரூப் சிஸ்கோ நிறுவனத்தின் தலைவர் இஸ்வந்தர் சிங், போதை பொருள் தடுப்பு ஆணையர் அரவிந்தன், மற்றும் உலக சாதனை அமைப்பின் மேலாளர் கிரிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அலுவலர் அகிலா முத்துராமலிங்கம், ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன்,மற்றும் கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர். மாலை நேர கலை நிகழ்ச்சியில் மைக் முரளி, திரை நட்சத்திரங்கள் நடிகர்கள் சூரி, சதீஷ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பாடகர்கள் கார்த்திக், பிரதீப்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News