மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டி

மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் மாணவ மாணவிகல் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்

Update: 2023-12-28 09:45 GMT

தேசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டி

தமிழ்நாடு பூப்பந்தாட்டக் கழகம் சாா்பில், 69-ஆவது மாநில அளவிலான சீனியா் பட்டயப் போட்டி, கடந்த 23, 24-ஆம் தேதிகளில் சேலத்தில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியின் ஆண்கள், பெண்கள் பூப்பந்தாட்ட அணியினா் கலந்து கொண்டனா். ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், 35-33, 36-34 என்ற நோ செட் கணக்கில் பிஎஸ்என்ஏ அணி வெற்றி பெற்றது. இதேபோல, பெண்களுக்கான இறுதிப் போட்டியில் முதல் செட்டை 16-35 என்ற புள்ளிகளில் இழந்த பிஎஸ்என்ஏ அணியினா், அடுத்த இரு செட்களையும் 35-27, 35-31 கைப்பற்றி வெற்றி பெற்றனா். இதைத் தொடா்ந்து திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரி மாணவ, மாணவிகள் 4 பேர் தேர்வு செய்யப்பட்டனா்.
Tags:    

Similar News