திருத்தணி அருகே அரசு தொடக்கப் பள்ளியில் தேசிய மலர் தாமரை மறைப்பு
திருத்தணி அருகே அரசு தொடக்கப் பள்ளியில் தேசிய மலர் தாமரை மறைக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-15 16:23 GMT
மறைக்கப்பட்ட தாமரை மலர்
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அரசியல் கட்சி சார்ந்த விளம்பரங்கள், கட்சி சின்னங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆர்.கே.பேட்டை அடுத்த ஜனகராஜகுப்பம் அரசு தொடக்கப் பள்ளியில், சமீபத்தில் புதிய வண்ணம் பூசப்பட்டது.
அதில், தேசிய சின்னங்களும் வரையப்பட்டன. தேசிய மலரான தாமரையும் வரையப்பட்டிருந்தது. தாமரை மலர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் சின்னம் என்ற அடிப்படையில், அந்த ஓவியம் தற்போது மறைக்கப்பட்டுள்ளது