சேலம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தினம்
சேலம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் பாலின உணர்திறன் அமைப்பு சார்பில் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கணேசன் வழிகாட்டுதல்படி தேசிய பெண் குழந்தைகள் தினம் மற்றும் சர்வதேச கல்வி தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதற்கு துறையின் பாலின உணர்திறன் அமைப்பு தலைவர் தமிழ்சுடர் வரவேற்று பேசினார். துறை டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு எம்.பி. கலந்து கொண்டு பெண் குழந்தைகள் மேம்பாட்டு திட்டங்கள், கல்வியின் முக்கியத்துவம், வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார்.
பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் சுதிர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் சிறந்த மாணவிகளுக்கு அன்னபூரணி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முடிவில் துறை பாலின உணர்திறன் அமைப்பு துணைத்தலைவர் அஜித்குமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பாலின உணர்திறன் அமைப்பின் உறுப்பினர் சிவரஞ்ஜன் உள்பட பலர் செய்திருந்தனர்.