இருளில் மூழ்கி இருக்கும் வெள்ளைகேட் மேம்பாலம்

தடையின்றி மின்விளக்கு எரிய சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை

Update: 2024-03-20 03:56 GMT

இருளில் மூழ்கி இருக்கும் வெள்ளைகேட் மேம்பாலம்

சென்னை - பெங்களூரு தேசிய நான்குவழிச் சாலையில் இருந்து, ஆறுவழிச் சாலை மற்றும், 18 இடங்கள் சிறுபாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த சாலை விரிவாக்க பணிக்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக, 654 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, சாலை விரிவாக்க பணிகள் மற்றும் மேம்பாலம் கட்டும் பணிகள் ஆங்காங்கே நிறைவு பெற்று உள்ளன. மேம்பாலத்திற்கும், சாலைக்கும் இணைப்பு ஏற்படுத்தும் பணிகள் முடங்கியுள்ளன. இருப்பினும், சாலை ஓரம் மின் விளக்கு பொருத்தும் பணிகள் நிறைவடைந்து, கடந்த மாதம் மின் விளக்குகள் ஒளிர வைத்தனர். ஒரு மாதமாக மின் விளக்குகள் எரிந்து வந்த நிலையில், நேற்றுமுன் தினம் இரவு வெள்ளைகேட் மேம்பாலத்தின் ஒரு பகுதி எரிந்து வருகிறது. மற்றொரு பகுதியில் இருக்கும் மின் விளக்குகள் எரியவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் இருளில் கடந்து செல்ல வேண்டி உள்ளது என, வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர். எனவே, தடையின்றி மின்விளக்கு எரிய சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது."
Tags:    

Similar News