நாகைமாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்
நாகப்பட்டினம் மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாமில் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளுமாறு ஆட்சியர் கூறியுள்ளார்.
Update: 2024-06-06 14:16 GMT
நாகப்பட்டினம் மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அடையாள அட்டை பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தகவல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் பிரதி மாதம் இரண்டாவது செவ்வாய் கிழமையில் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்; (ஒரத்தூர்) மற்றும் வேதாரண்யம் சுற்று வட்டாரத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டாவது வெள்ளிக் கிழமையில் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு மருத்துவர்கள், மன நல மருத்துவர்கள், கண் மருத்துவர்கள், காது மூக்கு தொண்டை மருத்துவர்கள் என அனைத்து சிறப்பியல் மருத்துவர்கள்; கொண்டு நடைபெறவுள்ளது. எனவே, அடையாள அட்டை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களது சமீபத்திய புகைப்படம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்களர் அடையாள அட்டை நகல் மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீடுத் திட்ட அட்டை நகல் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.