காவேரி ஆற்றில் தேசிய மீட்பு பணி குழு திடீர் ஆய்வு
தேசிய மீட்பு பணி குழு
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த காவேரிப்பட்டி காவேரி கரையோர பகுதிகளில் பருவ மழை மற்றும் கர்நாடக அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடி நிரம்பிய பின்னர் காவேரி ஆற்றில் 2 லட்சத்திற்கும் மேலான கனஅடி உபரி நீர் திறக்கப்படும் காலங்களில் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட காவேரி கரையோர பகுதிகளான கல்வடங்கம், காவேரிப்பட்டி
,தேவூர் அண்ணமார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்படுவதை தேசிய பேரிடர் மீட்பு படை கமேண்டோ பிரதீஷ், மற்றும் அனீஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பாதிப்பு ஏற்படும் இடங்களான தேவூர் பேரூராட்சிக்குட்பட்ட அண்ணமார் கோயில் சரபங்கா நதி மற்றும் காவேரிப்பட்டி பரிசல் துறை,உள்ளிட்ட இடங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தேசிய பேரிடர் மீட்பு மேலாண்மை குழு வட்டாட்சியர் வல்ல முனியப்பன்,சங்ககிரி வட்டாட்சியர் அறிவுடைநம்பி தேவூர் வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி உட்பட வருவாய்த்துறையினர் பேரிடர் மீட்பு குழுவினர் பலரும் உடனிருந்தனர்.