பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா

பேராவூரணியில் உள்ள குமரப்பா பள்ளியில் நடந்த தேசிய அறிவியல் தின விழாவில், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

Update: 2024-02-28 15:50 GMT

 பேராவூரணியில் உள்ள குமரப்பா பள்ளியில் நடந்த தேசிய அறிவியல் தின விழாவில், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி குமரப்பா பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா நடைபெற்றது.

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, குமரப்பா அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மூர்த்தி வரவேற்றார். சர் சி.வி.ராமன் கண்டுபிடித்து வெளியிட்ட ராமன் விளைவு உலகிற்கு அறிவிக்கப்பட்ட நாள் பிப்ரவரி 28, தேசிய அறிவியல் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த தினத்தை முன்னிட்டு வானவில் மன்றம் மற்றும் அறிவியல் மன்றம் இணைந்து மாணவர்கள் பரிசோதனைகள் அறிவியல் அறிஞர்கள் வாழ்க்கை வரலாறு, அறிவியல் அறிஞர்களின் தத்துவங்கள் அறிவியல் ஆக்கத்திற்கு என்ற நோக்கத்துடன் அடிப்படையில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டது.  மாணவர்களது படைப்புகளான வானம் நீல நிறம் ஏன், நீரூற்று, மின் ஆற்றல் இயக்க ஆற்றலை மாறுதல், ஒளிரும் விளக்கு போன்ற படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும், மாணவர்களின் படைப்புகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இதில் அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன், நபிஷாபேகம், நிர்வாக அலுவலர் சுரேஷ், ஆசிரியர்கள் பெரியநாயகி, விஜய், சத்யா, கிருஷ்ணவேணி, மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் பிரியங்கா நன்றி கூறினார்.

Tags:    

Similar News