வேலைவாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்பு குறித்த தேசிய கருத்தரங்கம்

சேலம் அரசு கலைக்கல்லூரியில் கூட்டுறவு துறை சார்பில் வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு தேசிய கருத்தரங்கம் நடந்தது.

Update: 2024-03-01 11:58 GMT

  சேலம் அரசு கலைக்கல்லூரியில் கூட்டுறவு துறை சார்பில் வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு தேசிய கருத்தரங்கம் நடந்தது.

கூட்டுறவு துறை சார்பில் வேலை வாய்ப்பு வறுமை ஒழிப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் சேலம் செரி ரோட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

கூட்டுறவு துறை உதவி பேராசிரியர் பிச்சமுத்து வரவேற்று பேசினார். கூட்டுறவு துறை தலைவர் சுரேஷ் பாபு கலந்தாய்வு குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார். இதில் கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி தலைமை தாங்கி பேசினார். சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ரவிக்குமார் மற்றும் திருச்செங்கோடு கூட்டுறவு சங்க இணை பதிவாளர் விஜயசக்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். சேலம் வட்டார கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள் முத்து விஜயா, லேகா, ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இந்த கருத்தரங்கில் கூட்டுறவுத் துறை சார்பில் பொதுமக்களுக்கு செய்யக்கூடிய அடிப்படை சேவைகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளின் பணிகள், அதன் மூலம் படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, கூட்டுறவு துறை சார்பில் மக்கள் எவ்வாறு பொருளாதார முன்னேற்றம் அடைகின்றனர், கூட்டுறவு மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த கூட்டுறவின் முக்கிய பங்களிப்புகள், கூட்டுறவுத் துறையை நவீனப்படுத்தி தற்கால விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படையில் கூட்டுறவு துறையை நவீனப்படுத்தி மக்களுக்கு எவ்வாறு சேவை செய்கின்றனர் என்பது குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது. மேலும் கூட்டுறவே நாட்டுயர்வு என்ற உன்னத இலக்கை அடையும் வண்ணம் கூட்டுறவு சிறப்பாக செயல்படுகிறது என கூறினர். உதவி பேராசிரியர் ரமேஷ் நன்றி கூறினா

Tags:    

Similar News