பவ்டா நிறுவனம் சார்பில் நாட்டு நலப்பணித்திட்டம் !
விழுப்புரம் மாவட்டம் பவ்டா கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது.
By : King 24x7 Angel
Update: 2024-03-01 09:50 GMT
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கீழ்சித்தாமூர் கிராமத்தில் பவ்டா கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் 7 நாட்கள் நடைபெற்றது. முகாமில் பள்ளி வளாகம், ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலு வலகம், நாடக மேடை, குளக்கரை, கோவில் வளாகம், சாலைகள் உள்ளிட்டவைகளை மாணவர்கள் தூய்மைப்படுத்தினர். மேலும் மாணவர்களுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்பு, யோகா பயிற்சி, இயற்கை பாதுகாப்பு, மரம் வளர்ப்பு, உணவே சிறந்த மருந்து, சிறு தொழில், தையல் பயிற்சி, இயற்கை விவசாயம், நீர் சேமிப்பு, தனிநபர் கழிவறை, மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நாட்டு நலப்பணித்திட்ட நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் பவ்டா நிறுவன தலைவர் ஜாஸ்லின் தம்பி தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் பிர பலா ஜெ.ராஸ், பவ்டா நிறுவன துணை இயக்குனர் அல்பினா ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சுதா கிறிஸ்டி ஜாய் வரவேற்றார். இதில் பவ்டா கல்வி ஒருங்கிணைப்பா ளர் டேவிட் ஆனந்த், கீழ்சித்தாமூர் ஊராட்சி மன்றத்தலைவர் அய் யம்மாள் கருணாநிதி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வெண் மதி, கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் சேகர் செய்திருந்தார். முடிவில் உடற்கல்வி இயக்குனர் ரவி நன்றி கூறினார்.